விபத்தில் முன்னாள் போராளி பலி!
Saturday, March 18th, 2017
ஒட்டிசுட்டான் பிரதான வீதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த நபரும் அவருடைய மகனும் காயமடைந்த நிலையில் நேற்று முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டதுடன் இன்று அவர் உயிரிழந்துள்ளார்.
ஒட்டிசுட்டன் சந்தியின் பிரதான வீதிக்கு ஏற முற்பட்ட மோட்டார் வாகனமும், பிரதான வீதியில் வந்துகொண்டிருந்த டிப்பர் வாகனமும் மோதிக்கொண்டதினால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் முன்னாள் போராளியும், வன்னி விழிப்புலன் அற்றோர் சங்கத்தின் முன்னாள் பொருளாளருமான குமாரசாமி நந்தகோபால் என்பவரே விபத்துக்குள்ளாகியுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Related posts:
பணியிலீடுபட்டிருந்த இளைஞன் திடீர் மரணம்!
நுண்நிதி இலகுகடன் வழங்கும் வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான பிரதமரின் யோசனைக்கு அமைச்சரவ...
அடையாளம் காணப்பட்ட முன்னணி சுகாதார ஊழியர்களின் உறவினர்களுக்கு தடுப்பூசி - அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ்...
|
|
|


