விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் இருவர் கைது
Thursday, October 5th, 2017
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கல்முனையில் கைத்துப்பாக்கி மற்றும் வாள் ஒன்றுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் இருவரும் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கல்முனையிலுள்ள வீடொன்றில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக இரகசிய தகவல் கிடைக்கப் பெற்ற போதிலும் ஒரு கைத்துப்பாக்கியும், 8 தோட்டாக்களும் ஒரு நெடிய வாளுமே அந்த வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் 62 மற்றும் 38 வயதுடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கல்முனை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்
Related posts:
அமைச்சரவையின் தலையீட்டின் மூலம் மாகாணசபை தேர்தல்களை பிற்போட முடியாது - தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு!
அமைச்சரவை மாற்றம் - ருவான் வெளியிட்ட தகவல் - அமைச்சு பதவி வேண்டாம் என்கிறார் நாமல்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் போன்களை பாவிக்க பணியாளர்களுக்கு தடை - பணிப்பாளர் சத்தியமூ...
|
|
|


