வவுனியா பேருந்து நிலையத்தில் ஆணின் சடலம் ​ மீட்பு

Wednesday, June 22nd, 2016

வவுனியா பேருந்து நிலையத்தில் அடையாளம் காணப்படாத நிலையில் ஆணின் சடலம் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது.

இன்று (22.) அதிகாலை பேருந்து நிலையத்தில் ஒரு வயோதிபரின் சடலம் இருப்பதைக்கண்டு கடை திறக்க வந்த கடை உரிமையாளர்கள் வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தி இருந்தனர்.

இதனை அடுத்து அங்கு வந்த பொலிசார் சடலத்தை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்கள்.சடலமாக மீட்க்கப்படடவர் தொடர்பான விபரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

41-12

Related posts: