வலி.வடக்கில் விடுவித்த பகுதிகளில் மீள்குடியமர 724 குடும்பங்கள் பதிவு!

Monday, November 21st, 2016

வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக மீள்குடியமர 724 குடும்பங்கள் இதவரை தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில் விடுவிக்கப்பட்ட தையிட்டி, ஊறணி, கிராமங்களில் மீளக்குடியமர இதுவரைக்கும் 724 குடும்பங்கள் தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்தால் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு பதிவுகளை மேற்கொண்டுள்ள குடும்பங்களில் அங்கு சென்று குடியமரும் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் உடனடியாக தலா 13ஆயிரம் ரூபா கொடுப்பனவும், காணி துப்புரவுக்காக பரப்பு ஒன்றுக்கு 1750ரூபா வீதம் மூன்று நாள்களுக்கு உணவுக்காக அங்கத்தவர் ஒருவருக்கு 150ரூபா வீதமும் அரசினால் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதேபோன்று எதிர்காலத்தில் கிணறு சீர்செய்வதற்கு 12ஆயிரம் ரூபா வரையிலும் மலசல கூடத்துக்காக 90ஆயிரம் ரூபாவும் வழங்குவதுடன், வாழ்வாதார உதவிக்கான ஏற்பாடுகளும் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

IMG_6428

Related posts:


வாய்பேச முடியாத பெண்ணை துஷ்பிரயோகம் செய்த நால்வருக்கு 15 ஆண்டு கடூழிய சிறை! -யாழ் நீதிபதி இளஞ்செழியன...
நாடு தொடர்பிலான கரிசனையுடன் ஒட்டுமொத்த மக்களும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க ...
யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் அத்தியட்கர் பிரிவில் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் சிறுவர்களுக...