வலி.வடக்கில் முதல்கட்டமாக 800 வீடுகள்!

Friday, April 15th, 2016

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து 2015ஆம் ஆண்டு முதல் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றப்படும் மக்களுக்காக மீள்குடியேற்ற அமைச்சினால் 800 இற்கும் அதிகமான வீடுகள் முதலாம் கட்டத்தில் வழங்கப்படவுள்ளதாகவும், இதற்கான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகத்தில் பயனாளிகள் விபரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகபின்றது.

மீளக்குடியெற்றப்படும் மக்களுடைய வீடுகள் போரினால் அழிக்கப்பட்டமை மற்றும் படையினர் அழித்தமை போன்றவற்றினால் மக்கள் உடனடியாக குடியேறுவதற்கு வீடுகள் இல்லாத நிலை காணப்படுகின்றது. மக்கள் தங்கள் சொந்த நிலங்களில் உடனடியாக மீள்குடியேற முடியாத நிலை காணப்பட்டிருந்தது. அத்துடன் உடனடியாக குடியேறிய மக்கள் தற்காலிக கொட்டில்களை அமைத்து தங்கியிருந்தார்கள்.

இந்நிலையிலேயே மீள்குடியேற்ற அமைச்சினால் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் தலா 8 லட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத் திட்டங்கள் வலி,வடக்கு பிரதேச செயலகத்திற்கு முதலாம் கட்டமாக 800 வரையானவை வழங்கப்பட்டிருக்கின்றது.

குறித்த வீட்டுத்திட்டத்தை பெற்றுக் கொள்வதற்கு பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுடைய பெயர் விபரங்கள் பிரதேச செயலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பயனாளிகள் தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் 14 நாட்களுக்குள் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் பயனாளிகளும் தங்கள் இருப்பிடம் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்தி தமக்கு வேறு பகுதிகளில் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டுமென பிரதேச செயலகம் அறிவுறுத்தியிருக்கின்றது.

இந்நிலையில் குறித்த வீட்டுத்திட்டங்கள் மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படுவதுடன் ஒவ்வொன்றினதும் பெறுமதி 8 லட்சம் ரூபாய் என தெரியவருகின்றது. இந்த வீடுகள் காங்கேசன்துறை, மயிலிட்டி, வசாவிளான் கட்டுவன் போன்ற 2015ஆம் ஆண்டு தொடக்கம் மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேறும் மக்களுக்காக வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது..

 

Related posts:


சமையல் எரிவாயு கொள்கலனை நாடுமுழுவதும் விற்பனைக்காக வைக்க வேண்டும் - வெளியானது அதி விசேட வர்த்தமானி அ...
யாழ்ப்பாணத்தில் மீண்டும் சுவிட்சலாந்து தூதரக அலுவலகத்தை திறக்குமாறு வடக்கு -கிழக்கு ஆயர் மன்றம் சுவி...
அங்கவீனர்களுக்கு வசதியாக வாக்களிக்கும் வகையில் 10 மாவட்டங்களில் புதிய அடையாள அட்டை - முன்னோடி வேலைத்...