வறட்சியினால் வில்பத்து தேசிய பூங்கா பாதிப்பு!

Saturday, October 15th, 2016

நாட்டில் நிலவிவரும் வெப்பநிலை காரணமாக வில்பத்து தேசிய பூங்கா பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள நூற்றுக்கணக்கான விலங்குகள் பட்டினியால் சாவை எதிர்நோக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த விடயம் குறித்து பூங்காவின் பொறுப்பதிகாரி மனோஜ் விஜேரத்ன தெரிவிக்கையில் – நாட்டில் நிலவிவரும் வெப்ப நிலை பருவ மழை தள்ளிப்போனமை மற்றும் விலங்குகளுக்கான நீர் வழங்கல் தொகுதித் தண்ணீரை விவசாயிகள் தமது தேவைகளுக்காக பயன்படுத்தல் போன்றவற்றின் காரணமாக இந்த வரட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விலங்குகள் தண்ணீரைத்தேடி காலஓயா மற்றும் மெதுறு ஓயா என்பவற்றை தேடிச் செல்வதாகவும் இந்தச் செய்கையானது வேட்டைக்காரர்களுக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்தியிருப்பதால் விலங்குகளுக்கு ஆபத்தான நிலை உருவாக்கியிருப்பதாகவும் இந்தப்பருவ மழை தள்ளிப்போனால் நிலைமை மிகவும் மோசமாகும் எனவும் தெரிவித்தார்.

vilpath_naltional_park

Related posts: