வரிகுறைப்பால் மது பாவனை 12 வீதத்தால் அதிகரிப்பு!
Thursday, February 22nd, 2018
அரசாங்கம் வரவு செலவுத்திட்டத்தில் மதுவுக்கான வரியைக் குறைத்ததன் பின்னர் நாட்டில் மது பாவனையானது 12 வீதத்தால் அதிகரித்துள்ளதாக புகையிலை மற்றும்மதுபானம் மீதான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாட்டில் மொத்த மதுபாவனையில் 18 வீதம் மது நுகர்வு காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நுகர்வு வீதத்தில் அதிகரிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபையின்கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மது நுகர்வு அதிகரித்தமை தொடர்பான அறிக்கையை ஜனாதிபதிக்கும், சுகாதார அமைச்சருக்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.
Related posts:
குடாநாட்டில் நடைபெறும் வெசாக் கொண்டாட்டங்களின் தொகுப்பு....................
டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் 25,000 அரச உத்தியோகத்தர்கள் ஓய்வு - பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மாய...
இந்திய வம்சாவழி தமிழ் மக்களை, 'இலங்கை தமிழர்' என அடையாளப்படுத்த முற்படுவது அடையாளத்தை மறைக்கும் செயல...
|
|
|


