வடமாகாண மருத்துவர் மன்றம் எனும் புதிய அமைப்பு யாழில் எதிர்வரும்-14 ஆம் திகதி அங்குரார்ப்பணம்!
Saturday, September 10th, 2016
வடமாகாணத்தில் பணியாற்றிய, பணி புரிகின்ற வைத்தியர்களின் நெறிப்படுத்தின் கீழ் வடமாகாண மருத்துவர் மன்றம் எனும் புதிய அமைப்பு எதிர்வரும் 14 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்படவிருக்கிறது என வடமாகாண மருத்துவர் மன்ற அமைப்பின் தலைவரும், வைத்திய கலாநிதியுமான ப.அச்சுதன் தெரிவித்துள்ளார்.
நேற்றுச் சனிக்கிழமை(10) முற்பகல்-10.30 மணியளவில் யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் பல்லாயிரம் பேர் மருத்துவராகப் பணியாற்றி வருகின்றனர். அவ்வாறான மருத்துவர்களுக்கென தொழிற்சங்கங்கள்,கல்விசார் அமைப்புகள் என இயங்கிவந்தாலும் வடக்குக்கே என உள்ள பல்வேறு பிரத்தியேக மற்றும் தீவிர பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. இந் நிலையில் இப்பிரச்சனைகள் இங்கு பணியாற்றும் மற்றும் வசித்து வரும் வைத்தியர்களின் பணிகள், தனிப்பட்ட மற்றும் குடும்பவாழ்வில் எவ்வாறான தாக்கங்களைச் செலுத்தி வருகின்றன என்பது தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும். இதனடிப்படையில் வடமாகாண மருத்துவர் மன்றம் அமைப்பு வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் செயற்படும்.

Related posts:
|
|
|


