வடமாகாண ஆளுநர் மீன்பிடித்துறை அமைச்சர் சந்தித்துப் பேச்சு !
 Wednesday, August 30th, 2017
        
                    Wednesday, August 30th, 2017
            
வடமாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொர்பாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீரவை அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
வடமாகாணக் கடற்றொழிலாளர் சங்கங்கள், கடற்றொழிலாளர் சமாசம் ஆகியன தொடர்ச்சியாக ஆளுநரிடம் விடுத்த கோரிக்கைகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் முடிவில் பல விடயங்களுக்கு உடனடித் தீர்வினைக் காண்பதற்கு மீன்பிடித்துறை அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
மண்டைதீவு, மூளாய், மாதகல், புங்குடுதீவு, தெல்லிப்பளை, ஆணைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்களுக்கான படகுகளை நிறுத்துவதற்கான இறங்குதுறைகளை அமைத்தல். அதேபோன்று மீனவர்கள் தமது படகுகளின் இயந்திரங்களுக்கான எரிபொருட்களை பெற்றுக்கொள்ள வசதியாக ஒவ்வொரு இறங்குதுறைகளிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்படும் எவும் தெரிவித்தார்.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        