வடமாகாணத்தில் திருத்தப்படாத வீதிகளாக 350 வீதிகள் காணப்படுகின்றன: ஒருங்கிணைந்த முதலீட்டுத் திட்டத்தின் மூலம் திருத்த முடிவு!

வீதி அதிகார சபைக்குக்கும், வடமாகாண சபைக்கும் இடையில் திருத்தப்படாத வீதிகளுக்கான வேலைத்திட்டத்தின் கீழ் வீதிக்கான ஒருங்கிணைந்த முதலீட்டுத் திட்டமொன்று கடந்த சனிக்கிழமை(18) வடமாகாணப் பிரதம செயலாளர் அலுவலகத்தில் வடமாகாணப் பிரதம செயலாளர் அ .பத்திநாதன் தலைமையில் இடம்பெற்றது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் என்.ஆர்.சூரியராட்சி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வீதிக்கான ஒருங்கிணைந்த முதலீட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் ஜெனிபா வீரக்கோன் ஆகியோர்கள் இதில் கலந்து கொண்டு உடன்படிக்கைக்கான ஒப்பந்தமும் செய்து கொண்டனர்..
வடமாகாணத்தில் திருத்தப்படாத வீதிகளாக 350 வீதிகள் காணப்படுகின்றன. 2,548 மில்லியன் ரூபா செலவில் இவ் வீதிகள் புனர்நிர்மாணம் செய்யப்படவிருப்பதாக வடமாகாணப் பிரதம செயலாளர் அ.பத்திநாதன் தெரிவித்தார்.
பல காலங்களாகக் குண்டும் குழிகளுமாகக் காணப்படுகின்ற வீதிகள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றதன. இவ்வாறான திட்டத்தின் கீழ் கிராம,நகரப் புறவீதிகள் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளதாக வடமாகாணப் பிரதம செயலாளர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|