வடமாகாணத்தின் 12 பாடசாலைகளில் தலா 17.6 மில்லியன் ரூபா செலவில் இரு மாடி ஆரம்பக் கற்றல் வள நிலையங்கள்!

Tuesday, July 26th, 2016

வடமாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சினால் வடமாகாணப் பாடசாலைகளில் 12 பாடசாலைகளில் இரு மாடி ஆரம்பக் கற்றல் வள நிலையங்கள் தலா 17.6 மில்லியன் ரூபா செலவில்  நிர்மாணிக்கப்படவுள்ளன.

யாழ்ப்பாணம் இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலை, வட இந்து ஆரம்பப் பாடசாலை, நெல்லியடி மெதடிஸ்த மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை, கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்பக் கல்லூரி, சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலை, வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலயம், முழங்காவில் ஆரம்பப் பாடசாலை, அனிச்சயன் குளம் ஆரம்பப் பாடசாலை, அடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை, பெரிய பண்டி விரிச்சான் ஆரம்பப் பாடசாலை, புனித ஆனான் ஆரம்பப் பாடசாலை, வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலை ஆகிய பாடசாலைகளிலேயே இந்தக் கற்றல் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

வடமாகாணப் பாடசாலைகளில் ஆரம்பக் கல்விக்குச் சிறந்த கற்றல் சூழலை ஏற்படுத்தும் முகமாகவே இந்தக் கற்றல் வள நிலையங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts: