வடமராட்சியில் புலனாய்வுப்பிரிவினர் விசாரணை..!

வடமராட்சி வதிரிச் சந்தியில் ரவுடிகளிள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்ததாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நேற்று மலை 6 மணியளவில் குறித்த பிரதேசத்தில் இருந்து நெல்லியடி சந்திக்கு அருகாமையில், இலக்கத்தகடுகள் இன்றி மோட்டார் சைக்கிளில் வாள்கள், பொல்லுகளுடன் ரவுடிகள் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகின்றது.
மேலும் குறித்த ரவுடிகள் பொதுமக்களை நோக்கிவந்து , வாள்களை காட்டி மிரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல்கள் வழங்கப்பட்டதும் குறித்த ரவுடிகள் உடனேயே தப்பி ஓடிவிட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் தற்போதும் பொலிஸார் மற்றும் புலனாய்வு துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
போலி நாணயத்தாள்களுடன் ஐவர் கைது!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் உள்ள பகுதிகளில் மருந்துகளை விநியோகிக்க விசேட தபால் சேவை - பிரதி தபால...
காலாவதி திகதி குறிப்பிடாமல் வழங்கப்பட்ட அனைத்து கனரக போக்குவரத்து சாரதி உரிமங்களும் இரத்து செய்யப்பட...
|
|