வடக்கில் கடமையாற்றும் பொலிஸாரின் விடுமுறைகள் நிறுத்தம்!
Thursday, October 27th, 2016
வடபகுதியில் கடமையாற்றும் பொலிஸாரின் விடுமுறைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெதரிவிக்கின்றன.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொக்குவில் குளப்பிட்டிச் சந்திப்பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டமையினை அடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களை நடத்தினர். நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை 25ஆம் திகதி பூரணஹர்த்தாலும் வடபகுதியில் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் இவ்வாறான சம்பவங்களில் பொலிஸார் எவரும் வீதிக்கு வரவில்லை.
பொலிஸ் தலைமையக தகவலுக்கு அமைவாக பொலிஸார் பொலிஸ் நிலையங்களில் முடங்கி இருப்பதாகவும் சில தினத்தின் பின்னர் போராட்டங்கள் நடைபெற்றதால் அதனை தடுக்க தயார் நிலையில் வெளியில் வருவார்கள் எனவும் தகவல்கள் கூறுகின்றன. பொலிஸ் நிலையங்களுக்கு கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. இதன்பின்பே பொலிஸாரின் விடுமுறைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
|
|
|


