வடக்கில் உள்ளூராட்சி டிப்ளோமா பாடநெறியில் 25 அலுவலர்கள் சித்தி!
Wednesday, September 20th, 2017
இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவனத்தினால் நடத்தப்பட்ட உள்ளூராட்சி உயர் டிப்ளோமா பாடநெறியில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 25 பேர் சித்தியடைந்துள்ளனர். சித்தியடைந்த 25 அரச அலுவலர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
பண்டாரநாயக்க பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் காலை 8.30 மணிக்கு நிகழ்வு ஆரம்பமாகும் என இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவனப் பணிப்பாளர் சஜீவ சமரவீர அறிவித்துள்ளார். இது தொடர்பில் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
இலங்கை அரச அதிகாரிகளுக்கு இந்தியா பயிற்சிநெறி!
பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாக்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசி...
வடக்கு மக்கள் அனுபவித்து வரும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் - பிரதமர் தினேஷ் குணவர்தன ...
|
|
|


