வசீம் தாஜுதீனுடன் வழக்கு: மர்ம நபர் தொடர்பான விபரத்தை 19ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!
Monday, January 9th, 2017
றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன், படுகொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்றப்பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகிய இருவரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருவரையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொட்ஸ்கி உத்தரவிட்டுள்ளார்..
வசீம் தாஜூதீன், படுகொலை செய்யப்பட்ட தினத்தன்று, அவருடைய வாகனத்தின் பின் ஆசனத்தில் அமர்ந்து இன்னொரு நபர் பயணித்திருப்பது தொடர்பாக தெரியவந்துள்ளது என்று சட்டமா அதிபர் சார்பாக மன்றில் ஆஜராகியிருந்த பிரதி சொலிஸிட்டர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்

Related posts:
யாழில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்!
அனைத்துப் பாடசாலைகளும் இன்று மீண்டும் ஆரம்பம் – சுகாதார வழிகாட்டுதல்கள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செ...
கல்வியங்காட்டில் பல்வேறு குற்றச் செயல்கள் - டென்மார்க்கில் உள்ள பிராதான சந்தேக நபரை இன்டர்போல் உதவிய...
|
|
|


