லெபனானில் உள்ள தொழிலாளர்களுக்கு உதவ இலங்கை அரசு முயற்சி!

லெபனானில் ஆவணமற்ற நிலையில் வாழும் சுமார் 5000 இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சட்டபூர்வ தொழிலாளர்களாக்குவதற்கு வழிவகைகளை செய்ய லெபனான் அரசாங்கத்தின் உதவியினை இலங்கை நாடியுள்ளது.
வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க லெபனான் பிரதமர் Saad Harirயை தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துள்ளார்.
இதன்போது, பரஸ்பர நன்மைக்கான வர்த்தகம், பொருளாதாரம், சமூகம், கலாச்சார துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவது மற்றும் புதிய துறைகளில் இருக்கும் இருதரப்பு இராஜதந்திர மற்றும் தொழிலாளர் உறவுகளை மேம்படுத்துவது தொடர்பிலும் இருவருக்கும் இடையில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
லெபனானில் வசிக்கும் சுமார் 5000 ஆவணமற்ற இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சட்டபூர்வமயமாக்கல் செயற்பாடுகளுக்கு லெபனான் அரசாங்கத்தின் உதவியை நாடுவதாக இராஜாங்க வெளிவிவகார அமைச்சர் வசந்த சேனநாயக்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட தொழிலாளர்களை மறுசீரமைப்பின் 11360/K.M.Ain/1 என்ற இலக்கத்தின் கீழ் மீளக் குடியமர்த்துவதற்கு உதவுமாறு அவர் லெபனான அரசாங்கத்தின் உதவியை கோரியுள்ளார்.
.
Related posts:
|
|