லக்கலை காவல்நிலைய ஆயுத திருட்டு: மூன்று கட்டங்களாக விசாரணை ஆரம்பம்!
Friday, April 22nd, 2016
லக்கலை காவற் நிலையத்தில் இடம் பெற்ற ஆயுத திருட்டு தொடர்பில் மூன்று கட்டமாக ரகசிய காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவத்தன்று இரவு காவல் நிலையத்தில் கடமையில் இருந்த அதிகாரிகளின் இரத்த மாதிரிகளை இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் பரிசோதனைக்காக அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. ஆயுதங்கள் திருடப்படுவதற்கு முன்னர் லக்கலை காவற்துறையினர் பலர் ஒன்றிணைந்து மது விருந்தொன்றை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. காவல் நிலையத்தினுள் நடத்தப்பட்ட இந்த விருந்தில் வெளிநபர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளமை தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட காவற்துறை அதிகாரி ஒருவர் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.
Related posts:
ஓய்வூதிய கொடுப்பனவிற்கான உத்தியோகபூர்வ இணையத்தளம்!
அரசாங்கத்தின் சீனிக்கான வரி குறைப்பு மோசடியல்ல - இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க சுட்டிக்காட்டு!
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக பதிவுசெய்யக்கோரி இவ்வருடத்தில் 76 விண்ணப்பங்கள்!
|
|
|


