ரோம் பிரகடனத்தில் கையொப்பமிடுவதை நிராகரித்தது இலங்கை!

Thursday, September 22nd, 2016

ரோம் பிரகடனத்தில் கையொப்பமிடுவதனை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பிலான ரோம் பிரகடனத்தில் கையொப்பமிடுமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பலவந்த காணாமல் போதல்கள் குறித்த விசாரணைக்குழு இலங்கையிடம் கோரியுள்ளது.இந்த பிரகடனத்தில் அமெரிக்கா, ரஸ்யா, இந்தியா போன்ற நாடுகளும் கையொப்பமிடவில்லை.

இந்த பிரகனடத்தில் கையொப்பமிடுமாறு சுவிட்சர்லாந்து உள்ளிட்ட சில நாடுகள் ஏற்கனவே இலங்கையிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 33ம் அமர்வுகளின் போது குறித்த விசாரணைக்குழு, இலங்கையிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தது.

ஹேக்கில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க அனுமதிக்கும் வகையில் இந்த பிரகடனம் அமைந்துள்ளது.எனினும், இந்த பிரகடனத்தில் கைச்சாத்து இடுவதற்கு இலங்கை மீளவும் மறுப்பு வெளியிட்டுள்ளதாக கொழும்பு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது

1409578206internation court of justice

Related posts: