ரூபா 7 இலட்சம் பெறுமதியான கடல் அட்டை மீட்பு!
Monday, September 19th, 2016
மண்டபம் அருகே தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பறிமுதல் செய்து மெரைன் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்டபம் கடற்கரைப் பகுதியிலிருந்து கீழக்கரைவழியாக இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக மெரைன் பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மெரைன் பொலிஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மண்டபம் தெற்கு கற்கரைப் பகுதியல் தடை செய்யப்பட்ட அரியவகை உயிருடன் கூடிய சுமார் 250 கிலோ எடை கொண்ட கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருந்ததை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட அதே பகுதியை சுரோஷ்குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டையின் மதிப்பு சுமார் ஏழு இலட்சம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கடத்தல் சம்பவம் குறித்து முக்கிய குற்றவாளிகளை தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Related posts:
கோப்பாய் குப்பிழாவத்தையில் 175 லீட்டர் கோடாவுடன் ஒருவர் கைது!
2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி வெளியானது!
கரவெட்டி கோவிற்சந்தைக்கான அடிக்கலை நாட்டிவைத்து பொது வர்த்தக வளாகத்தின் நிர்மாணப்பணிகளை ஆரம்பித்துவை...
|
|
|


