ரவிராஜ் படுகொலை: ஏழு சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

Friday, March 18th, 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக ஏழு சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய போதிய சாட்சியங்கள் இருப்பதாக தெரிவித்துள்ள கொழும்பு மேலதிக நீதிவான் குறித்த வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளார்

நான்கு கடற்படையினர், கருணா குழுவைச் சேர்ந்த இரண்டு  பேர், உள்ளிட்ட ஏழு சந்தேநபர்களுக்கு எதிராக, ரவிராஜ் மற்றும் அவரது சாரதி ஆகியோரைப் படுகொலை செய்தது உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளை கொண்ட குற்றப்பத்திரத்தை  குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்று கொழும்பு  மேலதிக நீதிவான் திலின கமகே முன்னிலையில் தாக்கல் செய்தனர்

பி.சுரேஸ், ஹெட்டியாராச்சிலாகே பிரசாந்த சந்தன குமார, காமினி செனவிரட்ண, பிரதீப் சமிந்த, சிவகாந்தன் விவேகானந்தன், ரொய்ஸ்டன் ரூசன் மற்றும் சம்பத் முனசிங்க ஆகிய சந்தேக நபர்களுக்கு எதிராக சுருக்க முறையற்ற விசாரணைகளை நடத்துமாறும் சட்டமா அதிபர் திணைக்களம் கோரியது. இதையடுத்து, சுருக்க முறையற்ற விசாரணைகளை நடத்துவதற்கு நீதிவான்  அனுமதி வழங்கினார்

அதேவேளை, சந்தேகநபர்களான சரண் மற்றும் சுரேஸ் ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. அவர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது. இதையடுத்து அவர்களை கைது செய்வதற்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கின் ஆவணங்களை கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு மாற்றுமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.

 

Related posts:

உலகுக்கு நாம் எடுத்துக் காட்டிய நல்லிணக்கம் முழு இஸ்லாமிய உலகிற்கும் ஒரு சிறந்த முன் உதாரணமாகும் – ர...
சிறந்த சூழ்நிலை ஏற்பட்ட பின்னர் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் - கல்வி அம...
கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை நாளை ஆரம்பம் - வினாப் பத்திரங்கள் பரீட்சை இணைப்பு மையங்களுக்கு ...