யுத்த வீரரின் பெற்றோருக்கு புதிய வீடு

Saturday, April 29th, 2017

நாட்டில் மனிதாபிமான நடவடிக்கையின்போது தமது உயிரை தியாகம் செய்த யுத்த வீரரின் பெற்றோருக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டொன்று இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவினால்அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவின் தீர்மானத்திற்கு இணங்க வயோதிபமுற்ற இப்பெற்றோரின் பொருளாதார நிலை மற்றும் அவர்களின் ஆரோக்கியம் என்பவற்றை கருத்தில்கொண்டு குறித்த வீடு நேற்று முன்தினம் வழங்கப்பட்டுள்ளது.

2009 ஜனவரி 15ம் திகதி கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கையின் போது நாட்டுக்காக தனதுயிரை தியாகம் செய்த இலங்கை சிங்க படைப்பிரிவை சேர்ந்த கோப்ரல் எம் பி லக்மால் என்பவரின் பெற்றோருக்கே குறித்த வீடு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது
குறித்த வீட்டினை நிர்மாணிப்பதற்கான ஆரம்ப நிதியுதவியினை படை தளபதிகளின் நிதியம் ஊடாக மேற் கொள்ளப்பட்டுள்ளதுடன். ராகம பகுதியில் காணித்துண்டு ஒன்றும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக சுமார் 3.8 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதற்கான நிதியி உதவியினை இலங்கை சிங்க படைப்பிரிவு, இராணுவ விவகாரங்கள் பணியகம், மறுசீரமைப்பு பணியகம் மற்றும் சில நன்கொடையாளர்கள் உள்ளிட்டோர் வழங்கியுள்ளனர்.

Related posts: