யாழ் ரத்ன விருது – 2018 க்கு விண்ணப்பங்கள் அனுப்பலாம்!
 Thursday, July 26th, 2018
        
                    Thursday, July 26th, 2018
            யாழ் ரத்னா விருது மற்றும் கலைத்துறை சான்றிதழுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண பிரதேச கலாசாரப் பேரவையினால் வழங்கப்படுகின்ற விருதான யாழ் ரத்னா விருது – 2018 இற்கு இலக்கியம் மற்றும் எழுத்துறை, நாடகம், இசை நாடகம், நாட்டுக்கூத்து, நடனம், சங்கீதம், இசை, ஓவியம், சிற்பம், உலோகக்கலை ஆகிய துறைகளில் பணியாற்றியவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
60 வயது பூர்த்தியடைந்த இதுவரை யாழ் ரத்னா விருதைப் பெற்றுக்கொள்ளாத யாழ் பிரதேச செயலர் பிரிவினை நிரந்தர வதிவிடமாகக்கொண்ட கலைஞர்கள் விண்ணப்பிக்க முடியும்.
அத்துடன் கலைத்துறைசார் சான்றிதழுக்கான விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பதாரி 18 – 40 வயதுக்குட்பட்டவாரகவும் இருக்க வேண்டும். விண்ணப்பப் படிவங்களை யாழ் பிரதேச செயலக கலாசாரப் பிரிவில் பெற்று பூரணப்படுத்திய விண்ணப்பத்துடன் உரிய கலைத்துறையை சான்றுப்படுத்தும் ஆவணப் பிரதிகளுடன் 20.08.2018 இற்கு முன்னர் விண்ணப்பிக்க முடியுமென பிரதேச செயலரும் கலாசாரப் பேரவைத் தலைவருமான பொ.தயானந்தன் தெரிவித்துள்ளார்.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        