யாழ்.மாநகரில் 905 பேருக்கு டெங்கு!

யாழ்.மாநகர பிரதேசத்தில் கடந்த ஆண்டில் 905 பேர் டெங்கின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்தது.
குறிப்பாக நாவாந்துறை, வண்ணார்பண்ணை, நல்லூர், குருநகர் போன்ற பிரதேசங்களில் இதன் தாக்கம் சற்று அதிகரித்துக் காணப்பட்டது. ஜனவரி 153 பேரும் பெப்ரவரி 89 பேரும் மார்ச் 72 பேரும் ஏப்ரல் 73 பேரும் மே 56 ஜுன் 39 ஜுலை 55 ஓகஸ்ட் 31 செப்ரெம்பர் 30 ஒக்டோபர் 101 நவம்பர் 77 டிசெம்பர் 129 பேருமென 905 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதாரப்பிரிவினரின் தொடர்ச்சியான விழிப்புணர்வு செயற்பாடுகளால் இதன் தாக்கம் குறைந்து சென்றதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவித்தன.
அதே சமயம் அந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இது வரைக்கும் 45 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
தங்கம் கடத்திய இரு பெண்கள் கைது!
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஏனைய வருடங்களைப் போலவே இம்முறையும் சிறப்பாக கொண்டாடப்படும...
13 - 14 ஆம் திகதிகளில் மின்வெட்டு ஏற்படுத்தப்படமாட்டாது! - பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
|
|