யாழ். பல்கலைக்கழகத்தில் வீதி விபத்து விழிப்புணர்வுக் கவனயீர்ப்புப் போராட்டம்!
Monday, October 10th, 2016
வடபகுதியில் வீதி விபத்துக்களால் ஏற்படும் தேவையற்ற உயிரிழப்புக்களைத் தடுக்க வலியுறுத்தி யாழ். போதனாவைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று திங்கட்கிழமை(19) முற்பகல் -10 மணி தொடக்கம் 11 மணி வரை ‘எழுந்து நிற்போம்’ எனும் தொனிப் பொருளில் வீதி விபத்துத் தொடர்பான விழிப்புணர்வுக் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
குறித்த விழிப்புணர்வு நிகழ்விற்கு ஆதரவு வழங்கும் முகமாக யாழ். பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் சங்கம், ஊழியர் சங்கம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து பல்வேறு பாதாதைகளைத் தாங்கி அமைதியான கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து “அதிகரித்து வரும் வீதி விபத்துக்களும், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளும்” எனும் தலைப்பில் விழிப்புணர்வுக் கருத்துரைகளும் இடம்பெற்றது

Related posts:
பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு – வானிலை அவதான நிலையம்!
எதிர்வரும் 26 ஆம் திகதி அனைத்து தெரிவத்தாட்சி அதிகாரிகளும் கொழும்புக்கு அழைப்பு!
தொழில் முயற்சி துறைக்கான கடன் வழங்கல் இலக்குகளை அறிமுகப்படுத்த இலங்கை மத்திய வங்கி தீர்மானம்!
|
|
|
அனைத்து பாடசாலைகளுக்கும் உடல் வெப்பமானி மற்றும் முகக்கவசங்களை பெற்றுக்கொடுக்க கல்வி அமைச்சு திட்டம் ...
திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்க LIOC க்கு அழைப்பு - மின் இணைப்பை இந்தியாவுடன...
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்த...


