யாழ். குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின்தடை !
Thursday, September 1st, 2016
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை வெள்ளிக்கிழமை(02) யாழ். குடாநாட்டின் சிலவிடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாண மின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இதன் படி நாளை வெள்ளிக்கிழமை(02) காலை-08.30 மணி முதல் மாலை-5.30 மணி வரை புன்னாலைக்கட்டுவன், புன்னாலைக்கட்டுவன் வடக்கு, குரும்பசிட்டி, வயாவிளான், மயிலங்காட்டின் ஒரு பகுதி, அச்செழு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்களுக்கான இறுதித் திகதி நீடிப்பு!
இலங்கை கடல் எல்லையில் கடல்சார் எதிர்வுகூறல் கட்டமைப்பை அமைப்பதற்கு 5 இலட்சம் டொலர் பெறுமதியான முதலீட...
மட்டு மாவட்டத்தின் விவசாயத்துறை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்துவருகின்றது - இராஜாங்க அமைச்சர் சிவநேசது...
|
|
|


