யாழ். இந்துக் கல்லூரியில் ஆரோக்கிய வாழ்வு தொடர்பான விழிப்புணர்வுச் செயற்திட்டம்!

Friday, September 23rd, 2016

யாழ். மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஆரோக்கிய வாழ்வு தொடர்பான விழிப்புணர்வுச் செயற்திட்டமொன்று நேற்று  வியாழக்கிழமை(22) பிற்பகல் யாழ்.இந்துக் கல்லூரியின் சபாலிங்கம் மண்டபத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு தொடர்பான சிறப்பு வைத்திய நிபுணர் மகாலிங்கம் அரவிந்தன் தலைமையில் இடம்பெற்றது.

யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தினரின் ஏற்பாட்டில் புலம்பெயர் தமிழர்களின் மருத்துவ அமைப்பான சர்வதேச மருத்துவக் கழகத்தின்(IMHO) அனுசரணையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

யாழ். இந்துக்கல்லூரியின் பிரதி அதிபர் திரு-பரமேஸ்வரன் தொடக்கவுரை ஆற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு தொடர்பான சிறப்பு வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி- மகாலிங்கம் அரவிந்தன் ஆரோக்கியவாழ்க்கை முறையின் இன்றியமையாத தேவை, ஆரோக்கிய வாழ்க்கை முறையைத் தொலைத்தமையால் ஏற்பட்ட விளைவுகள், ஆரோக்கிய வாழ்க்கை முறையைப் பின்பற்றக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறையால் நாம் பெறும் நன்மைகள் ஆகிய விடயங்களை உள்ளடக்கி விசேட கருத்துரையாற்றினார்.

குறித்த செயற்திட்டம் யாழ். மாவட்டத்திலுள்ள 150 பாடசாலைகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது.

unnamed

Related posts: