யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியினால் குறுங்கால கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்
Monday, May 22nd, 2017
யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியினால் NVQ தரக் குறுங்கால கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. க. பொ. த சாதாரண தரம் சித்தி பெற்றவர்கள் தகவல் தொடர்பாடல்,தொழிநுட்பவியல்,கணனி வலையமைப்பு, கணனி வன்பொருள், கணிய அளவை உதவியாளர்கள், அலுவலக நடைமுறைகள் போன்ற கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தரம்-10 வரை கல்வி கற்றவர்கள் மோட்டார்ச் சைக்கிள் திருத்துநர், வெல்டிங் போன்ற கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
குறித்த கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியில் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று எதிர்வரும்- 15 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும். இந்தக் கற்கை நெறிகள் தொடர்பான மேலதிக தகவல்களை மேற்படி கல்லூரியில் பெற்றுக் கொள்ள முடியும்.
Related posts:
O/L பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஆட்பதிவு திணைக்களத்தின் கோரிக்கை!
பிளவுபட்டு செயற்படும் காலம் இதுவல்ல – நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் தருணம் இது...
சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதில் நவீன முறைமை - தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் தெரிவ...
|
|
|


