யாழ்ப்பாணம் கே.கே.எஸ்.வீதியிலுள்ள விற்பனை நிலையமொன்றில் இளைஞரொருவர் சடலமாக மீட்பு !

Friday, March 31st, 2017

யாழ்ப்பாணம் கே.கே.எஸ்.வீதியிலுள்ள விற்பனை நிலையமொன்றில் இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,  யாழ்ப்பாணம் கே.கே.எஸ்.வீதியிலுள்ள விற்பனை நிலையமொன்றில் வாழ்ந்து வந்த இளைஞரொருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை(29) குறித்த விற்பனை நிலையத்தை விட்டு நீண்ட நேரமாகியும் வெளியே வராத காரணத்தால் அயலவர்கள் விற்பனை நிலையத்திற்குள் சென்று பார்த்த போது இளைஞர் இறந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.
சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டதையடுத்துச் சம்பவ இடத்திற்குச் சென்ற யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றப் பதில் நீதவான் ரி. சிவலிங்கம் ஆகியோர் மரண விசாரணைகளை மேற்கொண்டனர். பிரதேச பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related posts: