யாழ்ப்பாணத்தில் புதிய வகை வாழை இனம்  அறிமுகம்!

Saturday, October 8th, 2016

யாழ்.மாவட்டத்தில் ஆயிரம் ஹக்ரேயருக்கு மேற்பட்ட நிலப்பரப்புகளில் புதிய வகை இனமான ஹபன்டிஸ் இன வாழை செய்கை செய்யப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் வாழைச் செய்கையில் ஏற்பட்ட வீழ்ச்சியை அடுத்தே அந்தப் புதிய இனம் செய்கை பண்ணப்பட்டுள்ளது என விவசாயத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறுப்பிட்டி, நீர்வேலி, மாசுவன், ஊரெழு, புன்னாலைக் கட்டுவான், உரும்பிராய், அச்செழு, கோப்பாய் போன்ற இடங்களில் இந்தச் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. 44 பயனாளிகளுக்கு கால் ஏக்கருக்கு சொட்டு நீர்ப்பாசனத்தின் கீழ் 50 வீத மானிய அடிப்படையில் இந்தப் புதிய ரக வழை இனக்குட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாழைச்செய்கையின் ஏற்றுமதி தொடர்பாக விவசாயப் பணிமனை தகுந்த நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

02-1406989483-10-banana-leaf

Related posts:

அனைத்து விடயங்களையும் நேரடியாகவே கண்காணித்து வருகின்றேன் - முடியாவிட்டால் விலகி செல்வேன் - பிரதமர் ...
வரவு செலவுத் திட்டம் தொடர்பான இறுதி நிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமைச்சரவை அனுமதி!
காசாவில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 மில்லியன் டொலரை திரட்டும் ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு அ...

வாடகைக் குடியிருப்பாளர்களுக்கு வீட்டுத்திட்ட முறை - பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகார...
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு – இளைஞர்களுக்கு விடுக்கப்பட்டது கடும் எச்சரிக்கை -...
இரத்து செய்யப்படுகின்றது உள்ளூராட்சித் தேர்தலுக்காக வழங்கப்பட்ட வேட்புமனுக்கள் - யோசனை சமர்ப்பிக்கப்...