யாழில் நெற்செய்கையில் 50 வீத அறுவடைப் பணிகள் முழுமை!
Thursday, February 1st, 2018
யாழ்ப்பாணக்; குடாநாட்டில் பெரும்போக நெற்செய்கையில் இதுவரைக்கும் 50 வீதத்துக்கும் அதிகமான அறுவடை நிறைவு பெற்றுள்ளது.
தொடர்ந்தும் நெல் அறுவடை செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என விவசாயத் திணைக்களம் தெரிவித்தது. கடந்த இரு நாள்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை வேறுபாட்டால் அறுவடை செய்யப்படவில்லை. தொடர்ந்து நேற்றிலிருந்து விவசாயிகள் அறுவடையில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.
அறுவடை செய்யப்படும் நெற் பயிர்கள் உடனடியாக இயந்திரம் மூலம் நெல்லாக மாற்றப்படுகிறது. கடந்த வருடத்தின் இறுதியில் ஏற்பட்ட கடுமையான வறட்சி காரணத்தால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் அநேகமான செய்கையாளர்களுக்கு பெரும் நஸ்டம் ஏற்பட்டது. கடுமையான வறட்சிக்குப் பின்னர் மழை பெய்து கொடுத்ததால் அந்தப் பயிர்கள் ஒருவாறு தப்பித்துக்கொண்டன.
Related posts:
நஞ்சு ஊட்டப்பட்ட இறைச்சியை உணவாக்க வேண்டாம் - எச்சரிக்கை!
கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரொருவருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம்!
போலி மருந்து விற்றவருக்கு நீதிமன்றின் தீர்ப்பு
|
|
|


