மெக்ஸ்வெல் பரணகமவினால் இரண்டு உள்ளகப்பொறிமுறைகள் பரிந்துரை!

Sunday, August 21st, 2016

யுத்த காலங்களில் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை நடத்திய மெக்ஸவெல் பரணகமவின் தலைமையிலான குழுவினர், தமது இறுதியறிக்கையில் உள்ளக பொறிமுறைக்கான இரண்டு பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர்.

சிறப்பு நீதிமன்றம் மற்றும் உண்மையை கண்டறியும் குழு என்பனவே அவையாகும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தக்குழுக்கள், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பிலான விடயங்கள் ஆராயும் என்று பரணகம குழுவினர் பரிந்துரைத்துள்ளனர். இதன்படி குற்றவியல் குற்றங்களுக்கு உள்ளானவர்கள் நீதிமன்றங்களால் குற்றவாளிகளாக இனங்காணப்படாவிட்டால், அவர்கள் உண்மையை கண்டறியும் குழுவில் முன்னிலையாகவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் திகதியன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் மூன்று பேர் அடங்கிய இந்த ஆணைக்குழுவினர், கடந்த மாதம், ஜனாதிபதியிடம் தமது அறிக்கையை சமர்ப்பித்தனர். இதேவேளை காணாமல் போனோர் என்று உறுதிப்படுத்தப்படும் ஒருவருக்காக அவரின் குடும்பத்துக்கு 5இலட்சம் ரூபா வரையில் நட்டஈடு வழங்கப்படவேண்டும். அந்தக்குடும்பத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மாத்திரமல்லாமல், மனவள ஆலோசனைகளும் வழங்கப்படவேண்டும் என்று குழுவினர் பரிந்துரைத்துள்ளனர்.

Related posts:

நயினாதீவு அம்மன் விவகாரம் தொடர்பிழல் பிரதமரின் அவசர உத்தரவையடுத்து தொடர்புடைய படையினரிடம் விசாரணை!
விமான நிலையங்களின் செயற்பாட்டை தடையின்றி முன்னெடுங்கள்! - விமானப் போக்குவரத்து அமைச்சருக்கு ஜனாதிபதி...
கடற்றொழில்துறையுடன் தொடர்புடைய தொழில் வாய்ப்புக்காக பயிற்சி பெற்ற 120 இலங்கையர்கள் அடங்கிய குழுவொன்ற...

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களின் போது செய்தி ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்காதிருக்கத் தீர்மானம்!
மின்சார கேள்வி குறைந்தளவான மட்டத்தில் இருந்தபோது மின்வெட்டு - சட்ட நடவடிக்கை எடுக்க ஏற்பாடு என பொதுப...
யாழ் மாவட்டத்தில் இன்றுமுதல் இறுக்கமடையும் போக்குவரத்து நடைமுறைகள் - யாழ் மாவட்ட மாவட்ட பிரதிப் பொலி...