மூவர் கைது – அச்சுவேலியில் தப்பிச் சென்ற ஐந்து பேரைத்தேடி பொலிஸார் வலைவீச்சு!
Sunday, September 6th, 2020
சமூகவிரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் மூவரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர், அத்துடன் தப்பிச் சென்ற மேலும் 5 பேரையும் கைது செய்யப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
புத்தூர் – சிறுப்பிட்டியில் வைத்து நேற்று முன்தினம் மாலை இவர்கள் கைது செய்யப்பட்டனர். வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் 8 பேர் கொண்ட கும்பல் வாள்களுடன் சிறுப்பிட்டியில் இருந்து புத்தூர் கலைமதி வீதி ஊடாக மோட்டார் சைக்களில் வந்துள்ளனர்
அச்சமயம் இவர்களை அப்பகுதி இளைஞர்கள் மடக்கிப் பிடித்து அச்சுவேலி பொலிஸில் ஒப்படைத்தனர்.
மற்றவர்கள் தப்பி ஓடிய நிலையில், ஒருவரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்தனர். இந்நிலையில் தப்பிச் சென்ற ஏனைய 5 பேரையும் கைது செய்யப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புத்தூர் – ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற ரீதியில் இந்தக் குழுவினரிடம் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


