முரளிதரன் எப்படி உதவலாம்?

Friday, July 22nd, 2016

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு முத்தையா முரளிதரன் உதவுவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏமாற்றம் தெரிவித்ததாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தலைவர் திலங்க சுமதிபாலா தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கை வந்துள்ளது. இந்த தொடருக்கு அவுஸ்திரேலிய அணி இலங்கையின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனை தனது அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது.

இந்நிலையில் நாட்டிற்கு முக்கியத்தும் கொடுத்து விளையாடும் முத்தையா முரளிதரன் போன்ற சிறந்த வீரர்கள் இது போன்று எதிரணிக்கு எப்படி உதவலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் புலம்பியதாக திலங்க சுமதிபாலா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய இலங்கை கிரிக்கெட் சபை, நாடாளுமன்ற துணை சபாநாயகருமான திலங்க சுமதிபாலா, முரளிதரன் இப்படி செய்வது கண்டிப்பாக நெறிமுறையற்ற செயல் இல்லை. ஒரு வீரராக அவர் நினைத்ததை செய்ய அவருக்கு முழு உரிமையும், சுகந்திரமும் இருக்கிறது. கிரிக்கெட் வாரியம் இதை ஏன் என்று கேட்க முடியாது என்று அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

முன்னதாக முன்னாள் இலங்கை வீரர் ஜெயவர்த்தனே இங்கிலாந்து அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்ட போது கூட இது போன்ற விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts:

கொலைகார நுண்கடன் பொறிக்கு எதிரான போராட்டத்தில் இணையுங்கள் - வவுனியாவின் பல பகுதிகளில் சுவரொட்டிகள்!
பாடசாலைச் சீருடை விநியோகிக்கும் பொறுப்பு உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களுக்கு – அமைச்சரவை அங்கீகாரம்!
வறட்சியான காலநிலையால் இதுவரை 2 இலட்சத்து 48 ஆயிரத்து 531 பேர் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்தியந...