முதியோருக்கான 2000ரூபா கொடுப்பனவில் 100ரூபா வெட்டு – பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க விசனம்!

Thursday, December 1st, 2016

முதியோருக்கு வழங்கப்படும் 200ரூபா மாதாந்தக் கொடுப்பனவில் 100ரூபா வெட்டப்படுவதற்கு தன் கடுமையான எதிர்ப்பை சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

எனது கருத்தினால் அமைச்சர் கோபிப்பாரோ தெரியாது. எனினும் நான் எனது கருத்தை முன்வைக்க வேண்டும். முதியோர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 2000ரூபா கொடுப்பனவில் 100ரூபா வெட்டப்படுவது மிகவும் பாவச்செயல். அந்தப் பணத்தை பெறுவதற்காக ஒரு மாதம் காத்திருக்கும் முதியோர் எம்மைத் திட்டியவாறே அப்பணத்தைப் பெறுவர். எனவே 2000ரூபா கொடுப்பனவில் 100ரூபா வெட்டப்படுவதை நான் எதிர்க்கிறேன். தேவையானால் யாராவது ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இது தொடர்பில் பிரேரணை கொண்டு வருவார்களேயானால் எனது பிரதியமைச்சர் சம்பளத்தில் அரைவாசியை கொடுக்க தயாராகவுள்ளேன். நான் திருமணம் செய்யாதவன். அதனால் எனக்கு பணம் முக்கியமில்லை என்றார்.

gayantha-1

Related posts: