முச்சக்கர வண்டிகளை திருடி பாகங்களாக்கி விற்பனை செய்த கும்பல் கைது!

Friday, August 26th, 2016

முச்சக்கர வண்டிகளை திருடி அவற்றின் பாகங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்தமையுடன் தொடர்புடைய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது கைதுசெய்யப்பட்டவர்களில் மூவரை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதமன்ற உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வத்தளை , பேலியகொடை , களனி, மோதரை, கிரான்ட்பாஸ்,மட்டக்குளிய மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்ட்டுள்ளனர். முச்சக்கரவண்டிகளின் இலக்கத் தகடு மாற்றப்பட்டு மிக்கக்குறைந்த விலைக்கு நீர்கொழும்பு மற்றும் திஹாரி பிரதேசங்களில் விற்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் அவர்களிடமிருந்து 20 முச்சக்கர வண்டிகள் பொலிஸாரால் மீட்டகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: