முகாமைத்துவ உதவியாளர் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல்!

முகாமைத்துவ உதவியாளர்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்களை கோரியிருப்பதாக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி இம் மாதம் 16 ஆம் திகதியாகும். போட்டிப் பரீட்சைகள் மூலம் ஆட்சேர்ப்பு இடம்பெறும். உளச்சார்பு, மொழியாற்றல் ஆகிய இரு வினாத்தாள்களுக்கு விடையளித்தல் வேண்டும். சித்தியடைவதற்கான ஆகக் குறைந்த புள்ளிகளாக ஒவ்வொரு வினாத்தாள்களிலும் ஆகக் குறைந்தது 40 வீதமான புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டும்.
போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளது. இப் பரீட்சை திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை ஆகிய நகரங்களில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
18 முதல் 30 வயதுக்குட்பட்ட க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மொழி, கணிதம் மற்றும் இரண்டு பாடங்களில் திறமைச் சித்திகளுடன் ஒரே அமர்வில் ஆறு பாடங்களில் சித்தி பெற்றிருப்பதோடு, க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் ஒரே அமர்வில் சித்தி பெற்றிருக்க வேண்டும். பழைய திட்டத்தில் ஒரே அமர்வில் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
முறையாக பூரணப்படுத்திய விண்ணப்பப் படிவங்களை செயலாளர், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு, கிழக்கு மாகாணம், 198, உட்துறை முகவீதி, திருகோணமலை எனும் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.
Related posts:
|
|