மீனவர்கள் மூவருக்கும் தடுப்புக்காவல் நீடிப்பு!
Saturday, December 17th, 2016
இராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் மூன்று பேருக்கான தடுப்புக்காவல் உத்தரவு எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் நீதிபதி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இராமேஸ்வரம் அரிச்சல் முனை முதலாம் தீடை பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 22 ஆம் திகதி பிளாஸ்டிக் படகுடன் கரை ஒதுங்கிய இலங்கை மீனவர்கள் 3 பேரை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், இவர்கள் இலங்கை தலைமன்னாரை சேர்ந்த தேவநேசன், அருள்நேசன் மற்றும் வவுனியா ஓமந்தையை சேர்ந்த விஜி என தெரிந்தது.
பாக் ஜலசந்தி கடற்பகுதியில் மீன் பிடித்த போது படகில் டீசல் தீர்ந்ததால் காற்றின் போக்கில் திசைமாறி வந்ததாக இவர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து மூவரும் ராமநாதபுரம் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related posts:
17 ஆம் திகதி வரை 04 பாடசாலைகளுக்கு விடுமுறை!
ஆறு துறைகளின் கீழ் கல்வி சீர்திருத்தம் - அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவி...
இனவாதம் மற்றும் மதவாதத்தை ஒதுக்கிய நல்லிணக்கத்தின் ஊடாக அபிவிருத்தியை அடைவதே அரசின் நோக்கம் - ஜனாதிப...
|
|
|


