மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் குதிக்கும் லொத்தர் சீட்டு விநியோகஸ்தர்கள்!
Monday, January 16th, 2017
லொத்தர் சீட்டு விற்பனை செய்வதை இன்றுமுதல் இடை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக லொத்தர் சீட்டு விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வருடம் முதல் லொத்தர் சீட்டு ஒன்றின் விலை 30 ரூபாவாக அறவிடப்படும் என அரசாங்கம் முன்மொழிந்திருந்தது. குறித்த முன்மொழிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தே லொத்தர் சீட்டு விற்பனை செய்வதை நாளை முதல் இடை நிறுத்த உள்ளதாக தேசிய லொத்தர் சபை சங்கம் இன்று அறிவித்துள்ளது.
இதேவேளை,லொத்தர் சீட்டு ஒன்றின் விலையை 20 ரூபாவால் குறைக்குமாறு ஜனவரி முதலாம் திகதி லொத்தர் சீட்டு விநியோகஸ்தர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
பொலிஸ் அவசர சேவைப் பிரிவை வடக்கில் தமிழ் மொழியில் செயற்படுத்த நடவடிக்கை! - பொலிஸ்மா அதிபர்!
சுற்றுலா விடுதிகளை தரப்படுத்தல் ஆரம்பம்!
துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய இரதோற்சவத்தை முன்னிட்டுப் பாதயாத்திரை
|
|
|


