மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

தனது வீட்டில் மின்சாரம் தடைப்பட்ட வேளையில் காரணம் அறியாது மின்மானி பெட்டியை பரிசோதனை செய்ய முயற்சித்த நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் கினிகத்தேனை பிரதேச பகுதியில் நேற்று(11) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் வீட்டின் உரிமையாளரான ஏ.நுவான் சந்துரங்க (வயது 34) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதேவேளை சடலம் பிரேத பரிசோதனைக்காக கினிகத்தேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Related posts:
மீள்குடியமர்த்தப்படவுள்ள மக்களின் விபரங்களை திரட்டும் பணி முன்னெடுப்பு – யாழ் மாவட்ட மேலதிக செயலாள...
கிழக்கில் தனியார் கல்வி நிலையங்களை ஒழுங்குபடுத்துவதற்கு நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழ...
யாழ்ப்பாணம் - நாவாந்துறையில் இரு குழுக்களுக்கிடையில தகராறு - இரண்டு வாகனங்கள் தீயிட்டு எரிப்பு!
|
|