மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்!
Sunday, October 16th, 2016
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் எற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதன் செயற்பாடு தற்போது முழுமையாக தடைப்பட்டுள்ளது.
இதனால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள் என்று அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்சன ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
அனல்மின் நிலையத்தின் மூன்று இயந்திரங்களையும் மீள செயற்படுத்த இரண்டு வாரங்கள் செல்லுமென்றும் அவர் கூறினார். இயந்திரங்களை திருத்துவதற்கு சீனாவிலிருந்து அதிகாரிகளை வரவழைக்க வேண்டியுள்ளது என்றும் அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்சன ஜயவர்த்தன தெரிவித்தார்.

Related posts:
யாழ். தையிட்டி கிழக்குப் பகுதியில் கிணறொன்றிலிருந்து பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு
இலங்கை வர வெளிநாடுகளில் காத்திருக்கும் 50000 இலங்கையர்கள் - வெளிவிவகார அமைச்சு தகவல்!
பொதுஜன பெரமுனவின் அரசியல் பயணத்தை முடக்க உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் மீண்டும் பொய் பிரசாரங்க...
|
|
|


