மாத்திரையை தவறி கொடுத்ததில் பச்சிளம் குழந்தை பரிதாப மரணம்!

Thursday, February 16th, 2017

இரத்த அழுத்த நோய்க்கு பயன்படுத்தப்படும் மாத்திரையை பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு விழுங்க கொடுத்தமையினால் குறித்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

கடுமையாக நோய்வாய்ப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  வேளையிலேயே இந்த குழந்தை நேற்று மாலை உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மாவட்டபுரம் – நல்லிணக்கபுரம் பகுதியில் 8 மாதத்தில் பிறந்த குழுந்தை ஒன்றுக்கு உடல் பலவீனத்தைப் போக்குவதற்காக வீ.கோ மாத்திரையும், குழுந்தையின் தாய்க்கு இரத்த அழுத்தத்திற்கு பயன்படுத்தப்படும் மாத்திரையும் வழங்கப்பட்டுள்ளது.

இரு மாத்திரையும் மஞ்சள் நிறத்தில் இருந்தமையினால் 13ஆம் திகதி மாலை குழுந்தையின் தாய் வீ.கோ மாத்திரைக்கு பதிலாக இரத்த அழுத்தத்திற்கு பயன்படுத்தும் மாத்திரையை குழந்தைக்கு கொடுத்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் குழந்தை கடுமையாக சுகயீனமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் உயிரிழந்துள்ளது.

இதேவேளை பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு எப்படி வீ.கோ. மாத்திரைகளை வைத்தியசாலை வழங்கியது? என உயிரிழந்த குழுந்தையின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மரண விசாரணை மேற்கொண்டதன் பின்னர் குழந்தையின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

baby-6000-01-1470056229

Related posts: