மாதகலில் 54 கிலோ கேரள கஞ்சா மீட்பு!
Thursday, November 3rd, 2016
இளவாலை – மாதகல் பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 54 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸ் மோசடி தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இந்த கஞ்சா தொகை நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.
வீட்டின் சமையல் அறையில் அடுப்பு அமைந்துள்ள இடத்தில் நிலத்திற்கு அடியில் இந்த கஞ்சா தொகை புதைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது.இந்தியாவில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்டுள்ள இந்த கஞ்சா தொகையில் பெறுமதி 60 இலட்சத்திற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts:
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு குறித்த வர்த்தமானி வெளியானது!
மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு புதிய நீதியரசர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான மனுக்கள் ஜனவரி 18 இல் பரிசீலனைக்கு - உச்ச நீதிமன்றம் உத்தரவு!
|
|
|


