மாணவனை தாக்கிய அதிபர் கைது!

மாணவன் ஒருவனைத் தாக்கிய அதிபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மாத்தறை, ஊருபொக்க பிரதேசத்தில் அமைந்துள்ள தேசிய பாடசாலை ஒன்றின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மனிதாபிமானமற்ற வகையில் பாடசாலை மாணவனைத் தாக்கியதாக அதிபர் மீது குற்றம்சாட்டி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தமுறைப்பாட்டுக்கு ஏற்ப அதிபரைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குதோற்றும் மாணவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
தலைமயிர் அதிகளவில் வளர்த்திருந்ததாகக் கூறி அதிபர் தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான மாணவர், ஹீகொடவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைதாகிய அதிபர் மொரவக்க நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். அதிபரைஎதிர்வரும் 7ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
Related posts:
ATM கொள்ளையிட்ட ரூ 50 இலட்சத்துடன் நால்வர் கைது!
பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளது - இறைவரி திணைக்களம்!
மன்னார் படுகையில் 250 மெகாவாட் திறன் கொண்ட புதிய காற்றாலை மின் நிலையத்தை அமைக்க அதானி குழுமத்துடன் வ...
|
|