மல்லாகத்தில் ரயில் மோதி ஒருவர் பலி!

Thursday, August 4th, 2016

மல்லாகம் கோட்டைக்காடு பகுதியில் புகையிரதம் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புகையிரத கடவையைக் கடக்க முயன்ற போதே குறித்தவயோதிபர் மீது ரயில் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் மரணமானவர் அதே இடத்தை சேர்ந்தவர் என்றும் 50 வயது மதிக்கத்தக்கவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: