மலையக மக்களது சம்பளப் பிரச்சினையில் தலையீடு செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!
Saturday, October 8th, 2016
தற்போது சர்ச்சைக்குரிய விடயமாகவுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையீடு செய்ய வேண்டுமென ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அஸ்ரப் அஸீஸ் கோரியுள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளங்கள் உயர்த்தப்படாமை தொடர்பில் ஏற்பட்டுள்ள பிணக்குகளை தீர்க்க ஜனாதிபதியின் தலையீடு அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார். முதலாளிமார் சம்மேளனம் அரசாங்கத்தின் உத்தரவுகளை உதாசீனம் செய்கின்றமையே இதற்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
கூட்டு உடன்படிக்கையில் முதலாளிமார் சம்மேளனம் கைச்சாத்திட்டிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த வரவு செலவுத்திட்டத்தில் தனியார்துறை ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 2500 ரூபா கொடுப்பனவு இரண்டு மாதங்களின் பின்னர் இடைநிறுத்தப்பட்டுள்ளதானலும், கூட்டு உடன்படிக்கையின் ஊடாக சம்பளங்கள் உயர்த்தப்படாமையினாலும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர்
இந்தப் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய தீர்வுத் திட்டமொன்றை வழங்க வேண்டுமென அஸ்ரப் அஸீஸ் ஊடகங்களின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts:
|
|
|


