மலேசியாவில் ஆட்கடத்தலுடன் தொடர்புடைய இலங்கையர்கள் கைது!

கோலாலம்பூர் பொலிஸாரால் மூன்று இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது ஆட்கடத்தலுடன் தொடர்புடைய சில இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுகின்றது..
குறித்த சுற்றிவளைப்புகளின் போது இலங்கையர்கள் இந்தியர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட தருணத்தில் சந்தேகநபர்கள் தடுத்துவைத்திருந்த 35 பேரையும் கோலாலம்பூர் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
அவர்களை வர்த்தக நிலையங்கள் மற்றும் பிற இடங்களில் தொழில்வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி மலேசியாவுக்கு அழைத்துச் சென்று அங்கு தொழில்வாய்ப்பை வழங்கவில்லை என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதேவேளை, அவர்களை நீண்ட காலமாக மலேசியாவில் தடுத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் தகவல்கள் வௌியாகியுள்ளன.
Related posts:
டீசல் வாகனங்களை ஒழிக்கப் போவதாக 4 நகரங்களின் மேயர்கள் அறிவிப்பு!
மலையில் மோதிய பயணிகள் விமானம் : 7 பேர் பலி!
விரைவில் எரிபொருளின் விலைகளில் திருத்தம் - மக்களுக்கு நிவாரணம் வழங்க மின்சாரம் கட்டணமும் குறைக்கப்பட...
|
|