மருந்து கொள்வனவின் போது இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி!

நாரஹேன்பிட்டி பொலிஸ் மருத்துவ மனையில் மருந்துகள் கொள்வனவின் போது அங்குள்ள உயர் அதிகாரி ஒருவர் மாதாந்தம் 100 இலட்சம் இலஞ்சமாக பெற்றுள்ளமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மருந்துகள் கொள்வனவின் போது அதிகாரி 35வீத பணத்தினை இலஞ்சமாக பெற்றுவந்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பணத்தின் சிறிய தொகைகள் ஏனைய பொலிஸ் அதிகாரிகள் பலருக்கும் இந்தஅதிகாரியால் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த உயர் அதிகாரியை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவராக ரணில் விக்ரமசிங்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூ...
வடக்கில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை பராமரிப்பதற்கு சிகிச்சை நிலையம் அமைக்க நடவடிக்கை!
மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.3 சதவீதமாக வளர்ச்சி - தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவி...
|
|