மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவு – 2716 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு!
Thursday, April 13th, 2017
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவு வகைகளை தயாரித்த 2716 நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 01ம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் 19,730 உணவு தயாரிப்பு நிறுவனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்களின் சங்கம் கூறியுள்ளது.
அதிகளவான சுற்றிவளைப்பு மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறினார். இந்த நடவடிக்கைக்காக நாடு பூராகவும் 2000 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
ஜனவரியில் பாரிய அரசியல் மாற்றம்? - முன்னாள் அமைச்சர் குமார் வெல்கம!
கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுவதில் உண்மை இல்லை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!
மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித கோரிக்கையும் கிடைக்கவில்லை - பொதுப் பயன்பா...
|
|
|


