மத்திய வங்கியின் புதிய பிரதி ஆளுநராக கே.டி ரணசிங்க!
 Thursday, June 8th, 2017
        
                    Thursday, June 8th, 2017
            
நிதிச்சபையின் அனுமதியுடனும் நிதியமைச்சரின் ஆலோசனையுடனும் மத்திய வங்கியின் புதிய பிரதி ஆளுநராக கே.டி ரனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
பிரதி ஆளுனர் கே.டி ரனசிங்க மத்திய வங்கியில் பொருளாதாரம், நிதிக்கொள்கை தொடர்பில் சுமார் 31 வருடத்துக்கும் மேற்பட்ட அனுபவத்தை கொண்டவராவார். ஏற்கனவே புள்ளிவிபரவியல் சர்வதேச விவகாரங்கள், மனித வள முகாமைத்துவம், ஊழியர் சேமலாப நிதியம் போன்றவற்றுக்கு துணை ஆளுனராக செயற்பட்டு வந்துள்ளார்.
மேலும் 2012 தொடக்கம் 2015 வரையான காலப்பகுதியில் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியம் ஆகியவற்றுக்கு பிரதி பணிப்பாளராகவும் செயற்பட்டு வந்துள்ளார். கொழும்பு பல்கழைக்கழத்தில் கலைமானி பட்டத்தையும் ஐக்கிய அமெரிக்காவின் மிச்சிகன் பல்கழைக்கழகத்தில் முதுமானி பட்டத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        