மட்டக்களப்பு- காங்கேசன்துறை இடையே இ.போ.ச.பேருந்து சேவை ஆரம்பம்!

மட்டக்களப்பில் இருந்து காங்கேசன்துறைக்கான இரவுநேர பேருந்து சேவை நேற்று(22) இரவு 8.20 மணிக்கு மட்டக்களப்பு பேருந்து தரிப்பு நிலையத்தில் இருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த இரவு நேர நெடுந்தூர பேருந்து சேவையானது [ 412 கி மீ] தூரம் கொண்ட இந்த பேருந்து சேவையை பல காலங்களுக்கு பின் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் உதயகுமார் ஆரம்பித்து வைத்தார்.
மட்டக்களப்பு, யாழ் மக்களினதும் ,இசை நடனக் கல்லூரி, கல்வியயல் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி இந்த இரவு நேர பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கப்ப பட்டுள்ளது . இதன் படி மட்டக்களப்பில் இருந்து இரவு 8.20 க்கும் காங்கேசன்துறை பேருந்து தரிப்பு நிலையத்தில் இருந்து இரவு 9.30 க்கும் தனது சேவையை தொடர்கின்றது.
Related posts:
நாளை முதல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரச்சனைக்குட்பட்டவர்களுக்கு உதவும் நடமாடும் சேவை !
தனிமைப்படுத்தல் விதிகளை மீறி முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம...
அத்தியாவசியப் பொருட்களை நிவாரண விலையில் பொதுமக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை!
|
|